கிருஷ்ணகிரி அணை

அமைவிடம் - கிருஷ்ணகிரி அணை
ஊர் - கிருஷ்ணகிரி அணை
வட்டம் - கிருஷ்ணகிரி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கல்வட்டம், குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்

விளக்கம் -

கிருஷ்ணகிரி அணை நீரில் மூழ்கிய பெருங்கற்காலச் சின்னங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் குறைந்த நிலையில் நீருக்குள் மூழ்கியிருந்த 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்களும், 10-க்கும் மேற்பட்ட குத்துக்கற்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு, கருப்பு சிவப்பு பானையோடுகளும் காணக் கிடைக்கின்றன. இவ்விடம் முன்பு பரந்த பரப்புள்ள ஈமக்காடாக திகழ்ந்திருக்கிறது என அறிய முடிகிறது.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி அணையின் நீரின் அளவு குறைந்த காலத்தில் நீருக்கு அடியில் மறைந்திருந்த பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் வெளியே தெரிகின்றன. இச்சின்னங்கள் அணையின் நீர்மட்ட உயர்வால் மறைந்திருந்தவை தற்பொழுது வெளிக்கொணரப்பட்டுள்ளன. பொதுவாக அணைக்கட்டுகள் பரந்த இயற்கையான நீர்நிலைப் பரப்பிலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த நீர்நிலைகளில் முற்காலத்தில் நீத்தாருக்கான நீர்ச்சடங்குகள் செய்யப்பட்டு அவ்விடத்திலேயே ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தன என்பது நாம் அறிந்ததே.